என் காதல் மொழி
என் காதல் மொழி


கண்ணில் நீரைக் காணாமல்
கரையும் தருணங்கள் பலவுண்டு
தன்னைமீறி அழும்போது
துயரம்மட்டும் துணையென்பதில்லை
பிரிந்தவர் கூடினால் பேசவும் முடியாமல்
கனமான நெஞ்சம் குளமான கண்கள்வழி
சொல்லும் கதை
இன்றுவரை கொண்ட துயரத்தின் எச்சமா?
இனிவரப் போகும் இன்பத்தின் உச்சமா?
அன்று என்னை வெறுத்துச் சென்றவன்
இன்று என்னை நாடிவந்தால்
வழியும் விழிகளில் வரவேற்பது - என்
விருப்பைக் காட்டவா வெறுப்பைக் காட்டவா?
கண்ணீர் ஒன்றே என் இதயமொழி
கதறுவதே என் காதல்மொழி
அவன் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்
அழுதுகொண்டே கொண்டாடும் அவலக் காதல்
அடிநெஞ்சில் தாக்கும் அசுரக் காதல்