ஒளிதரும் நிழல்
ஒளிதரும் நிழல்
மலர்ந்த மார்கழிக் காலைப் பொழுதில்
சிலிர்த்த எண்ணங்களுடன்
புலர்ந்த புத்தாண்டுப் பயணம்
மலரும் நினைவுகளாய்த் தங்கிய
மாலைப் பொழுதும் தாண்டி
இரவின் கரங்களில் இனிதே தவழ்ந்த தருணம்
நினைத்துப் பார்க்கிறேன்
நீங்காத சுவடுகளாய்த் தேங்கியவை சில
விண்மீன்களாய்த் தோன்றி மின்மினியாய் மறைந்தவை சில
என்னிற்கலந்து எனக்குள்ளே கரைந்தவை சில
என்மேல் தெறிக்காமல் எங்கோ மறைந்தவை சில
எந்த உருவத்திலும் வந்த படிமங்கள்
உளிகளாய் மாறி என்னைச் செது
க்கியதும் உண்டு
உரங்களாய் மாறி வளம் சேர்த்ததும் உண்டு
ஓவியங்களாய் மாறி ஒளிரவைத்ததும் உண்டு
செங்கனலாய் மாறி சீற வைத்ததும் உண்டு
சிறு பொறிக்குள் என்னைச் சிதற வைத்ததும் உண்டு
சின்னக் கத்திகள் என் சிறகுகளைச் சிதைக்காமல்
கடும்புயல்கள் என் கனவுகளைக் கலைக்காமல்
மனமெனும் மேகத்துள் மறைந்து மறைந்து தோன்றும் நிலவாய்
நம்பிக்கை தரும் நிகழ்வுகள் தடம் பதித்த சுவடுகளில்
வரும் ஆண்டிலும் பயணம் தொடர
ஒளிதரும் நிழலாய்
கடந்தஆண்டு கடக்கட்டும்