STORYMIRROR

ANURADHA CHANDRASEKHAR

Abstract

4  

ANURADHA CHANDRASEKHAR

Abstract

மன்னிப்போம் மறப்போம்

மன்னிப்போம் மறப்போம்

1 min
362

வரும் புத்தாண்டில் வகைவகையாய்

சபதங்கள் முன்மொழிகிறேன்

இதையெல்லாம் செய்து முடிப்பேன் என்று

இன்னும் வழிமொழிகிறேன்


'பப்' போகாமல் பாட்டி வீட்டுக்கே சென்றிடுவேன்

காரை விட்டிறங்கி காலாற நடந்து செல்வேன்

'மொபைல்' பார்வைக்கு முக்காடு போடுவேன்

மொக்கைக் கடிக்கு முழுக்குப் போடுவேன்

இது வருத்தப்படாத வாலிபர் வீறாப்பு சபதம்


தவணைமுறையில் தவறியும் பொருள் வாங்க மாட்டேன்

பெண்டாட்டியை மட்டும் பைக்கில் ஏற்றுவேன்

ஆபீஸ் முடிந்து நேரே வீடு செல்வேன்

பிள்ளையைத் திருத்துமுன் நான் நல்லவனாய் மாறுவேன்

இது மிடில்க்ளாஸ் மாதவர்கள் முட்டாள் சபதம்


கல்லூரி வகுப்பை கட்டடிக்க மாட்டேன்

கடலைபோடும் காளையைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்

ஸ்மார்ட் போனுக்காக மொக்கைப் பசங்களுக்கு

வலைவீச மாட்டேன்

கனவில்கூட சினிமாக் கதாநாயகனைக்

கண்டுகொள்ள மாட்டேன்

இது அழகான ராட்சசிகள் அல்டாப் சபதம்


கடைவாசலில் கால்கடுக்கக்  கணவரை 

காலம் முழுக்கக் காத்திருக்கச் செய்யமாட்டேன்

கரிப்பும் புளிப்புமாய் புதுமைகள் செய்து சமையலை

குப்பைக்கு அர்ப்பணிக்க மாட்டேன்

'வாட்ஸ் அப் ஃபார்வடு'க்கு வாழ்வை 

அர்ப்பணிக்க மாட்டேன் 

ஐந்து நிமிட ஒப்பனையுடன் புறப்பட்டு கணவரை

அசரவைத்து விடுவேன்

இது பட்டத்து ராணிகள் பந்தா சபதம்


சபதங்களெல்லாம் முதல்நாளுக்கு முந்தின நாள்

முதல்நாள் மட்டும் என்னை முழுதாக மன்னித்துவிடு

மறுநாளிலிருந்து என்னை முழுதாக மறந்துவிடு


Rate this content
Log in

Similar tamil poem from Abstract