புகைக்குள் மட்டுமே பகை
புகைக்குள் மட்டுமே பகை
பழனியில் எடுத்த பழைய புகைப்படம்
புகைப்படலம் படத்துக்கு மட்டுமே நினைவுகளுக்கல்ல
அம்மா மடியில் நான்
அத்தை மடியில் அவள்
இன்றோ அவள் மடியில் நான்
உருளும் குண்டுப்பாப்பா நான்
பறக்கும் பாவைப்பாப்பா அவள்
இன்றோ குண்டுமாமி அவள்
பறந்துகொண்டிருக்கும் வாலிபன் நான்
கருப்பு வெள்ளையில் வெள்ளந்தியாய் அன்று
கலர்பார்த்து களவும் கற்றுவிட்டோம் இன்று
அப்பாமுறைக்க மாமா சிரிக்க
அப்போதே முரண்பாடுகளின் ஆரம்பம்!
பகைப்படலம் படத்தில் மட்டுமே
நல்லவேளை நிகழ்வுகள் தப்பிவிட்டன
இன்று
மாமாவும் சிரிக்க
அப்பாவும் சிரிக்க
திருமணநாளின் புது நிழற்படம்