இறை மொழி...
இறை மொழி...
மண்ணையும் விண்ணையும்தண்ணீரையும்கண்ணீரையும்..சுடும் சூரியனையும்கடும் குளிரையும் வான்மழையையும்வாயுப்புரவியையும்பனி மலைகளையும்ஆழ் நீலக்கடலையும்,உன்னையும்,என்னையும், படைத்த இறைவனுக்கு...
நீ படைத்து நீ பேசிடும் பலருக்கும் புரியாதஉனது மொழிமட்டுமேதான் புரியுமென நீ நினைத்தால்..
பேரருளான இறைவனைப்பற்றிய புரிதலேஉனக்கில்லையென்பது மட்டும் அணுவளவும் ஐயமின்றி தெளிவாகப் புரிகிறது.
உனக்கே சில பல மொழிகள் தெரியுமெனமமதை கொள்ளும்மானிடா..
பேசும் திறனற்றோர்பேசாத சொற்களையும்துளியும் பிசகின்றிமுழுவதுமாய் புரிகின்ற..பேசும் மொழியுள்ளும்கேட்கும் செவியுள்ளும்எல்லா அணுவுள்ளும்நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனுக்கு புரியாத மொழியொன்றுஇவ்வுலகிலும்எவ்வுலகிலும் இருக்கவே வாய்ப்பில்லை என்ற உண்மை உனக்கேன் உறைக்காது போனது??
தரணியில் சிலகாலம் மட்டுமே வாழ்ந்து மடியப்போகும்தரமில்லா மானிடா.. மனிதருளுள்ளும்மொழிகளுள்ளும்வேற்றுமை காட்டும்உனக்கு உன்னிலும்உன் எண்ணத்திலும் மட்டுமே ஊனமென்ற உண்மை..முழுமையாக விளங்கிடும்நாள் வரையிலும்... நீயுமோர் ஐந்தறிவு விலங்கிற்கிணையே என விளங்கிக்கொண்டுமுடிந்தால் புரிந்தும் முயன்றும் உன்னைமனிதனாக மாற்றிக்கொள்..
இரா.பெரியசாமி..
