யாளிகள் கவனிக்கப்படுவதில்லை
யாளிகள் கவனிக்கப்படுவதில்லை




முதன் முதலில் அதை பார்த்தபோது
கோவில் மழை ஈரத்தில் நனைந்திருந்தது
கற்கள் தண்ணீரை உறிஞ்சி நிறமேறியிருந்தது
மழையில் சிலிர்த்தவாறு கால்கள் தூக்கி அது நின்றிருந்தது
அப்பொழுது அது ஆயிரம் வயதை கடந்திருந்தது
சிற்பியை தவிர மற்றவர்கள் அரிதாய் தீண்டும் வகையில்
நந்தி மண்டபத்தின் உச்சியில் தூய்மையோடு நின்றிருந்தது
அழுகிறதா சிரிக்கிறதா என்று தெரியாதவாறு
அகண்ட பல் வரிசையை அது பெற்றிருந்தது
மிக பெரும் நந்தியை விடுத்து தன்னை கவனிக்கச்செய்யும்
நூற்றாண்டுகளை உள்ளடக்கிய வசீகரம் அதற்கிருந்தது
புறாக்கள் வசிக்கும் கோவில் கோபுரங்களின் சாட்சியில் மாற்றங்களையும்,மனிதர்களையும் உற்று நோக்கியவாறு
அது நின்றிருந்தது யாராலும் கவனிக்கப்படாமலே...
ஆம்!! யாளிகள் கவனிக்கப்படுவதில்லை
அரிதான சில மனிதர்களை போலவே....