நிலா
நிலா
இரவில் நான் அழைக்கும்போதெல்லாம் என் அருகே வந்துவிடுகிறாய்
மேலிருந்து மெதுவாக என் தலை கோதுகிறாய்
உன் குளிர் முகம் காட்டி
என் வெளிர் முகம் தேற்றுகிறாய்.
நீ பூப்படைந்த பெண்ணா ?
இல்லை பூவையர் கொஞ்சும் ஆணா ?!!
இரண்டும் இல்லை
நீ தனித்திருக்கும் ஆணுக்கு பெண்
தவித்திருக்கும் பெண்ணுக்கு ஆண்
கருப்பு திரை அணிந்து வந்த
வெள்ளை முகமே
உனதென்ன அசல் மானின் கண்ணா ?
இல்லை நீ முசல்மானின் பெண்ணா ?!!...
எந்தன் நிலவே...
நீ பேசும் மொழி எனக்கு புரிவதில்லை
நான் பேசுவதோ உனக்கு கேட்பதேயில்லை
சண்டைக்கு வாய்ப்பேயில்லை ,இருந்தும் மாதம் ஒரு நாள் நீ வருவதில்லை
உனைநோக்கி எனையிலுக்கும் மாயவிசைக்கும்
எனை திட்டி தீர்க்கும் உன் அன்பு வசைக்கும்
விடுமுறைநாள் அந்த கறுப்புநாள் அமாவாசை பௌர்ணமி நிலவு என் அன்பின் அளவு......!!
- சு. ஹம்சம்ருத்திகா.