என் அம்மா !
என் அம்மா !

1 min

266
என்னை காணும்முன்பே என்னை நேசித்த முதல் இதயம்
கருவரையினுள் இருக்கும் போதே என் இரைப்பையின் தேவையை உணர்ந்த
ஒரு உன்னதம் !
காரிருளில் இருந்த எனக்கு வெளிச்சத்தை தந்த
ஒரு ஒளி ஓவியம் !
ஜனித்த எனக்கு தன் உதிரத்தையே பாலாய் தந்த
ஒரு பாசம் !
உயிர் கொடுத்த தன் தெய்வத்தை தனக்கு அறிமுகம் செய்த
ஒரு அற்புதம் !
என் அறிவு மெய்ப்பட தன்னையே ஒரு புத்தகமாக்கிய
ஒரு காவியம் !
வளர்ந்த பிறகும் என்னை ஒரு குழந்தையாக பார்க்கும்
ஒரு மனோபாவம் !
எனக்கு உலகை அறியவைத்து என்றும் புரியாத புதிராய் இருக்கும்
ஒரு பொக்கிஷம் !
எந்த கோவிலில் தேடினாலும் காணக்கிடைக்காத ஒரு தெய்வம்
என் அம்மா !!!