STORYMIRROR

க.வெங்கடேஷ் ஊத்தங்கரை.

Classics

4.3  

க.வெங்கடேஷ் ஊத்தங்கரை.

Classics

காதல்

காதல்

1 min
644


காதல் தான் என்னவள் மேல்

எண்ணிலடங்கா எண்ணில்

அவள் மேல் காதல் .....


அவளோ என்னை காண

தினமும் வருகிறாள் 

நான் இருக்கும் இடம் நாடி

நிதம் நிதம் ஆடை மாற்றி..

சில நேரம் பனி போர்த்தி...

சில காலம் வெப்பமூட்டி....

சில நேரம் நான் ஏனோ 

நனைந்து கரைகிறேன்

அவள் என்தன் மேல் வீசும்

இதமான தென்றுலுடன் 

சிறு சிறு மழைத்துளியில்....


 அவளின் அன்பில் நான் 

உயரம் சென்றேன் என 

கூறலாளேன் எனில் 

அஃது அவ்விடம் 

ஓர் ஈரக்காற்று தீண்டும் 

அதுவே அவளின் உச்சம்...


 எவ்வளவோ கோபங்கள் 

நான் காட்ட அவளோ 

என்னை மெய்கொண்டு 

அன்பில் தீண்ட 

என்றென்றும் ஓயாத 

காதல் தான்.... 


கல்லறை எனினும் கூட 

அதுவும்

அவளின் 

அங்கத்தில் தான்... 

அதுவும் கிடைக்கும் பட்சமே.....


என்றென்றும் என் காதலி

எனக்கு மட்டும் விதவிதமாய் 

தோன்றுகிறாள் 

அவள் மட்டும் எந்த 

தறி கொண்டு 

நெய்தாலோ விதவிதமாய் 

வர்ணங்கள் அவளின் மேல்....



அவளினை ரசிக்க 

என்றும் மறந்ததாய் இல்லை

மறந்தே இருப்பினும் 

கூட ஏதோ ஓர் தூதுவன் 

அவளிடமிருந்து 

எனக்கு வருகிறான் 

நிதம் நிதம் கீச்சலுடன் 

சேதி கொண்டு.....

அவளை நான் ரசிக்க 

மறந்தேன் என்பதனை நினைவூட்ட.




நிதம் நிதம் அவளை 

ரசித்தே சலைத்துப்போகாது 

என் வாழ்வு....

என் காதலி அவள் எங்கும் 

எனக்காய் நான் செல்லும்

இடம் யாவும் என்னுடன்.....




Rate this content
Log in

Similar tamil poem from Classics