ஒரு காவலன்
ஒரு காவலன்


இருள் சூழ பனி அடர்ந்த தினம் நான் எனது முதல் நாள் பணிக்கு சென்றேன்,
வாழ்க்கையில் இந்த தினத்தை நான் எதிர் பார்த்து கனவு கண்ட நாட்கள் நிறைய,
என் பெற்றோர்களுக்கு பெருமை சேர்க்க இந்த வனத்தை காக்கும் காவலர் வேலை என்னக்கு.
பிறந்த நாள் முதல் இயற்கையுடன் ஒன்றியே வாழ கற்று கொடுத்த என் தாத்தா என் வழிகாட்டி,
அவரின் வழியே நானும் என் கனவு வேலையை தொடர எண்ணி இன்று முதல் நாள் பணியில் இருக்கிறேன்,
இயற்கை வளம் காக்க என் வாழ்நாளை முழுவதும் அற்பணிப்பேன்.
மரம் செடி கோடி இவை மூன்றுமே என் மூச்சு உள்ளவரை காப்பேன்,
பூச்சிகளும் பறவைகளும் என் உடன்பிறவா உறவுகள் என்று எண்ணுவேன்,
மிருகங்களும் மற்ற உயிர்களும் நம்மை போல உயிர் என எண்ணி பாதுகாப்பேன் ஒரு காவலனாக.