சுதந்திரதினம்
சுதந்திரதினம்

1 min

146
என் இனிய இந்தியனே!
பாடுபட்டு பெற்ற
சுதந்திரத்தைக் காப்பாற்ற
என்ன செய்தாய்?
அடுக்கடுக்காய் குற்றங்கள்
பல செய்து இன்று மட்டும்
சுதந்திரதினத்தை நினைவுபடுத்துவதால்
யாது பயன்?
தன் நாட்டு சுதந்திரம் பேணிக்காப்பது
தாய் உடுத்திய
சேலையைக் காப்பதுபோலன்றோ!
இதை ஏன் மறந்தாய் மானிடனே!
சாக்கடைகளும் குப்பைகளும்
நிறைந்தவை என்றாலும்
மனிதாபிமானத்தால் மதவேறுபாடு
பாராட்டாத மனித உள்ளங்கள்
நிறைந்த நமது தாய்மண்ணை
மதித்து வாழ்வோம்!