STORYMIRROR

இரா.பெரியசாமி R PERIYASAMY

Classics Inspirational Others

5  

இரா.பெரியசாமி R PERIYASAMY

Classics Inspirational Others

பசுமை புதைந்த விதை

பசுமை புதைந்த விதை

1 min
493

புதைந்த நாளெல்லாம் 

விதையினுள் முடங்கி

மறைந்து தவமுற்ற

மரத்தின் உயிரின் கரு

விண்ணின் மழைத்துளி 

மண்ணினை நனைத்திட‌

நிலமகள் மகிழ்ந்திட

விதையது பிளந்து

திறந்து வழிவிட

மரக்கன்று முளைத்து

தலையினை வளைத்து

உயிர்தரும் பகலவன்

ஒளியினை வணங்கி

ஒளிதந்த பல‌த்தால்

தலையினை நிமிர்த்தி

எழுந்து வளர்ந்

விண்ணினை நோக்கி

செழித்து உயர்ந்து...


பறவைகள் குடும்பம்

மகிழ்ந்தும் கூடியும் 

கூடுகள் கட்டியும்

முட்டையிட்டு குஞ்சுகள்

பொறித்து குஞ்சுகளோடு

மகிழ்ந்து களிக்கவும்

கொஞ்சிக் குழவவும்

கிளைகளின் இடையிலும்

இலைகளின் நடுவிலும்

இடங்களை கொடுத்து


மானுடர் தொடங்கி 

பட்சிகள் விலங்குகள்

உள்ளிட்ட உயிரினங்கள்

யாவையும் உண்டுயிர்

வாழ்ந்திட காய்களையும்

கனிகளையும் கைமாறு

எதையும் எதிர்பாராது 

கனிவுடன் கொடுத்த

மரத்தின் மகிமையை

அறியா மனிதர்கள்..

மரங்களை வெட்டி

கொன்று குவித்திடும்

கொடிய கொலைப்பழி 

தலைமுறை தாண்டி

தந்திடும் தண்டனை 

வாராது தடுத்திட

மரங்களை காப்போம்

மரக்கன்றுகளை நடுவோம்


இரா பெரியசாமி...



Rate this content
Log in

Similar tamil poem from Classics