ஹைக்கூ.. சிறுகவிதைகள்...
ஹைக்கூ.. சிறுகவிதைகள்...
ஆண்டுகள் பல கடந்தும்
முகம் மாறவுமில்லை
வயது ஏறவுமில்லை
சுவற்றில் தாத்தா படம்..
என்றோ இறந்து போனவர்கள்.
இனறும் இளம் காதலர்களாக
கொஞ்சிக் குலாவுகிறார்கள்
பழைய திரைப்படம்..
மனிதர்களை உயிரோடு விழுங்கி
சேதமின்றி உயிருடன் உமிழ்கிறது
இராட்சத உலோகப்புழு..
தொடர்வண்டி..
ஜோடியை வெட்டிக் கொணர்ந்து
வாசலில் கட்டி வைத்தலும்..
மங்களத்தின் அடையாளம்
வாழைமரத் தோரணம்..
நேர்மையான, அப்பழுக்கற்ற
மக்களுக்காக உழைக்கும்
நல்லவர்களை காணவில்லை..
ஆட்சி அரசியலில்...
கரை வேட்டிகளால் தன்னில்
கறை படிந்து விட்டதாக மிகவும்
குறை பட்டுக் கொண்டது
வெள்ளை வேட்டி..
நடித்தவர்களும் ஆள்கிறார்கள்
ஆள்பவர்களும் நடிக்கிறார்கள்
ஆபத்தில் சிக்கி அவதிப்படுகிறது
மக்களாட்சி..
இரா பெரியசாமி