நேர்மறை நெஞ்சம்
நேர்மறை நெஞ்சம்
சரிந்து போன பாதையிலும்
சரித்திரம் படைக்க எண்ணிடுமே!
இழிவு படுத்திச் சென்றாலும்
இமயம் செல்ல ஏங்கிடுமே!
கவலைகள் சூழ்ந்துக் கொண்டாலும்
கனவுகளை இழக்க மறுத்திடுமே!
தடைகள் வந்து நின்றாலும்
தகர்த்து இலக்கை வென்றிடுமே!
சோர்வு கண்ட போதிலும்
சோதனை யாவும் தோற்றிடுமே!
நம்பிக்கை தணிந்த நொடியிலும்
நன்மைகள் பலவும் பார்த்திடுமே!
நேசம் மறைந்த இடத்திலும்
நேர்மை கொண்டு பழகிடுமே!
பொய் முகங்கள் நிறைந்த உலகிலும்
பொன்னாய் மலர்ந்து வாழ்ந்திடுமே!