இனிய காதல்
இனிய காதல்
1 min
233
நாட்கள் நகர்ந்து
நாடிக்குள் நுழைந்து
நான் இன்று சிறகாகின்றேன்...
பார்த்து புரிந்து
பாடல்கள் இசைத்து
பாதையில் உன் நிழலாகின்றேன்...
காற்றில் பறந்து
காலடிகள் சிலிர்த்து
காதல் வழி கவியாகின்றேன்...
வாசல்கள் துறந்து
வானுலகம் வாழ்த்த
வாழ்க்கையில் நின் துணையாகின்றேன்...