STORYMIRROR

இரா.பெரியசாமி R PERIYASAMY

Abstract Classics Inspirational

4  

இரா.பெரியசாமி R PERIYASAMY

Abstract Classics Inspirational

மனதிற்கு மரம் த‌ரும் உரம்

மனதிற்கு மரம் த‌ரும் உரம்

1 min
421

வெயிலின் கொடுமையை தாங்கிட

கோடையில் இலைகளை உதிர்த்து 

கதிரவன் ஒளியில் இலைகளின் 

மூலம் உணவுசெய்தலைத் தவிர்த்து...

 

தன்னுயிரினை காத்திடும் பொருட்டு

வாழ்க்கையின் உண்மையை உணர்ந்து

மாபெரும் வேள்வியொன்று புரிந்து.. 

கோடையை தாண்டியும் உயிர்பிழைத்து ..


மெதுவாய் புதிதாய் துளிர்த்து தழைத்து

மனதினுள்ளே ஈரம் நிறைந்து மகிழ்ந்து 

மணக்கும் வண்ண மலர்களை சொரிந்து

தென்றலில் அசையும் மரங்களிடமிருந்து..


காலத்திற்கேற்பவும், இடத்திற்கேற்பவும்

மாற்றிக்கொள்ள கற்றுக் கொண்டால்..

மனதின் கவலைகள் உதிரும் சறுகுகளாக‌.

மனதில் இன்பங்கள் மலரும் மலர்களாக..



Rate this content
Log in

Similar tamil poem from Abstract