STORYMIRROR

ANURADHA CHANDRASEKHAR

Abstract

4  

ANURADHA CHANDRASEKHAR

Abstract

காலத்தை வென்ற காவியம்

காலத்தை வென்ற காவியம்

1 min
679


பிரசவித்த பின்பும் கருவைத் தன்னுள்ளே சுமந்துகொண்டிருக்கும் 

இளமை மாறா கன்னித்தாய்

பிரசவித்ததில் எது உயர்வு?

நினைத்துப் பார்க்கிறேன்

காலம்தான் கண்டறியும்


வசந்த காலம் மனமறியும்

கார்காலம் களவறியும்

இறந்த காலம் நினைவறியும்

மனதை அடைந்து நினைவில் நிறைந்து

உயிரில் கலந்து உயர்வூட்டிய காவியம் எது?


நினைத்துப் பார்க்கிறேன்

மனதில் காதல்

நினைவில் அறிவு

உயிரில் உணர்வு

இதில் எது உயர்வு?

நினைத்துப் பார்க்கிறேன்


அறிவிற்கு விருந்தாய்

மனதை மகிழ்வித்து

உணர்வில் சிலிர்த்த காவியம்.?

நினைத்துப் பார்க்கிறேன்


மனதுக்கு ஊமர் கய்யாம்

உணர்வுக்குக் கம்பன்

அறிவுக்கு பாரதம்


அனைத்தையும் கடந்து நிற்பவன் அண்ணல் காந்தி

சத்தியத்தின் துணையுடன் சோதனகளை சாதனகளாக்கிய

'சத்திய சோதனை'யின் நாயகன்

காலத்தை வென்ற காவியத் தலைவன்


Rate this content
Log in

Similar tamil poem from Abstract