ராஜபோக யோகம்
ராஜபோக யோகம்


சேவக்கோழி கூவுது மச்சான்
எழுந்து சாலுக்கோலை எடுவே மச்சான்
நாளும் நல்ல நாளும் இது
நாத்து நடவேண்டுமன்றோ
நம்ம குடி ஓங்க வேண்டாமா - மச்சான்
நாலுபணம் சேர்க்க வேண்டாமா?
சம்பாப் பயிரு வளர்த்து - கழனியில்
தழை எரு போட்டு வெச்சேண்டி
உன் கையாலே வெளச்சிட்டா
காணுமடி வேணும் பலன்
கட்டழகு வீச்சுக்காரி - நல்ல
கெட்டிமுத்து பேச்சுக்காரி
நாளை புஞ்செய் நிலம் உழவேண்டும்
உழுது கம்புகேப்பை போட வேண்டும்
நஞ்செய்யிலே நெல்பருத்தி
புஞ்செயிலே சோளம்கம்பு
ராசிக்காக விளைந்துவிட்டால் - மச்சான்
ராஜபோக யோகம்தானே