STORYMIRROR

Siva Kamal

Tragedy Classics Inspirational

5  

Siva Kamal

Tragedy Classics Inspirational

எனக்கு நானே

எனக்கு நானே

1 min
132

எனக்கு நானே தைரியமூட்டிக்கொள்ள

என்னை நானே

உற்சாகமூட்டிக்கொள்ள

எனக்கு நானே 

ஆறுதல் படுத்திக்கொள்ள

என்னை நானே

அன்பு செலுத்திக்கொள்ள

ஒரு நாள் முழுக்க

பொழுது புலர்ந்து

பொழுது அடையும்வரை

நூறு வழிகள் கண்டுபிடிப்பேன்

தூக்கம்வரும்வரை

நூறு சமாதானங்கள் தேடிக்கொள்வேன்


இப்போதெல்லாம்

மதியமே இந்த விளையாட்டில்

களைப்படைந்துவிடுகிறேன்

என் தந்திரங்கள்

பாதி நாளிலேயே தீர்ந்துபோகின்றன


மீதிப்பொழுதில்

என்ன செய்கிறேன்

என்று கேட்கிறீர்களா?

கேட்காதீர்கள்

உங்கள் மனம் உடைந்துவிடும்


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Tragedy