விவசாயியின் பெருமை
விவசாயியின் பெருமை
அன்புள்ள நாளேடே,
பசி வந்திட
அனைத்தும் மறந்து
உணர்வெலாம் ஒடுங்க
உணவை தேடி நிற்கையில்
அறிவோம் - விவசாயத்தின்
அத்தியாவசியத்தையும்
விவசாயியின் அயராத
உழைப்பையுமே !
ஊரடங்கு வயிற்றிற்கு இல்லையே ?
நேரமானால் பசியெடுக்கும்
உணவில்லையேல் சிந்தையும் பிறழும்
உடல்நோக பயிரிட்டு
பாடுபட்டு வளர்த்து பாதுகாத்து
அறுவடை செய்ய இயலா வேளையில்
ஒவ்வொரு விவசாயியின்
உயிர் நோகும் வலி
அதை நாம் உணர்வோமா?
சாலையில் கொட்டிக் கிடக்கும்
காய்கறி கனி வகைகளும்
அறுவடை செய்ய இயலாமல்
செடிகளில் கனிந்து வெடிக்கும் காய்களும்
மரங்களில் கனிந்து அழுகிப் போகும்
தித்திக்கும் கனிகளும் உருவாக
உழைப்பினை கொட்டிக் கொடுத்த
உன்னத உயிரின் மகத்துவத்தை
உணரும் காலம் அது
வெகு தொலைவில் இல்லை -
இது இன்றைய சூழல் உணர்த்தும்
நிதர்சனமான உண்மை !