STORYMIRROR

வல்லன் (Vallan)

Abstract Tragedy

5  

வல்லன் (Vallan)

Abstract Tragedy

எல்லைக் கோடு

எல்லைக் கோடு

1 min
504

மரங்களும் செடிகளும் கூட

எல்லைக் கோடுகள் எதுவென்று

அறிந்திருக்க வேண்டும்...


ஓரடி மீறினாலும் 

வெட்டி எறியப்படுவோம் என்பதற்காக.


எதையும் தலையோடு 

தூக்கிப்போகப்போவது இல்லை...


அரைப்பிடி சாம்பலும் 

ஆற்றிலோ... குளத்திலோ...


அத்துக்குள் வாழ்வதென்றால்

ஆண்டவனாலும் முடியாது

அறியாச் செடிகளும்

உயிர்கள் தானே?


செடிகளின் கைகளுடைப்பது

வன்மத்தின் உச்சமல்லவோ?

கேடுகெட்ட மனிதப்பிறப்பே?


Rate this content
Log in

Similar tamil poem from Abstract