என் தேசம்
என் தேசம்
தலைசாய மென்தோள் தேடி
தடுமாறும் நேரம்...
கடும்பாறை நிற்கும் வெண்பாலை
என்தேசம் என்றுணர்ந்தேன்.
விரலோடு விரல் சேர்த்து நடைபயின்ற
நேரங்கள் கடந்து...
விழிநீர் துடைத்தெறிய விரல் தேடி
விடியாத இருளில் விழுந்தேன்.
பலவண்ணங்கள் பலவெண்ணங்கள்
எல்லாமே வெறும் கருப்பு வெள்ளை.
நினைவுகள் நீங்கவுமில்லை நிறையவுமில்லை
வெறுமனே மனம் மட்டும் கனக்கிறது...