முடிவில்லாத் தேடல்
முடிவில்லாத் தேடல்
முடிவில்லாத் தேடலில்
முன் நடக்கும்
எண்ணங்களின் சுவடுகளைப்
பின் பற்றி
வழி பிறழாது
கண்கள் மூடி
கால்கள் இரண்டும்
அந்தகாச இருட்டிலே
தளிர் நடையிட்டு
இசைவாய் கைகள் நீட்டி
முன்னிருப்பதைப் பற்றி
பெருவெளியில் அலைந்து
முடிவைத் தேடுகிறது
முடிவில்லாத் தேடலில்.