அல்குல் வதை
அல்குல் வதை


மொட்டுகள் மலர்வது இயல்பு தான்
மலர்ந்த மொட்டை மீண்டும்
இறுகக் கட்டுவது அபத்தமான ஒன்று...
இன்றும் மலரும் பல மொட்டுகள்
துருப்பிடித்த பிளேடுகளால் இதழ் சிதைத்து
ஊசியின் நாக்குகளால் துளைக்கப்பட்டு
நரம்புகளின் கைகளால் கட்டுண்டு
உணர்விழந்து அழுகி துர்நாற்றம் வீசுகின்றன.
கட்டி வைத்தால் மலர் வாடாது என்பது
எப்பேர்ப்பட்ட மூடத்தனம்?
கிளிட்டோரிஸ் சிதைந்து, இதழ்கள் இழந்து
மலர்ந்த மலர்கள் மீண்டும்
இறுகக் கட்டப்பட்டு, புதியனவாய்
வேண்டுவோருக்கு விற்கப்படுகின்றன...
வறுமையின் விளைபொருளாய்.