♪ கட்டிடத் தொழிலாளி ♪
♪ கட்டிடத் தொழிலாளி ♪
-----------------------------------------------
பிழைப்புக்கு உயிரை பணயம் வைத்தார்
உழைப்பில் உயரிய கட்டிடம் வகுத்தார்
மேசுதிரி என்பாரும் சிற்றாள் என்பாரும்
வீசிடும் கொத்தனாரும் மதிப்பின் தொடர்கள்
சிரசில் ஏற்றிய செங்கல் பாரமே
இறங்கி தேயும் கழுத்தின் எலும்பில் -
சிமண்டி தூசும் சுவாசப் பிணிநோவும்
மண்டித் தாக்கும் கைகால் வெம்பும்;
அல்லும் பகலும் கட்டிடும் சிற்பி
கல்லிலும் தூசிலும் நித்தம் தொய்வான்
கட்டும் இடமே கட்டிடம் பெயரில் !
படும் துன்பம் பாரமே துயரில்
கொட்டி கிடந்தால் செங்கற் குவியல்
கட்டி முடித்தார் கலையழகு கட்டிடம்
சொன்னார் நம்மொழி அறிஞர் அண்ணா;
பண்டைய தொழிலே நிர்மாண கட்டிடம்
முறைசேரா தொழிலில் முன்னேற்ற மில்லை
மறைவழியில் பெண்டிர்க்கு நாளும் தொல்லை
காப்பீடு இல்லாத கையறு நிலையில்
ஒப்பீடு இல்லா உயர்பணி இதுதான்..!