வலி
வலி


பிறர் வலியை
என் வலியாகவே
உணர்ந்து உணர்ந்து
எனக்குப் பழக்கமாகிவிட்டது
பிறகு ஒரு நாள்
சுயமாகவே எனக்கு வலித்தது
நான் பிறரைத்தேற்றுவதுபோலவே என்னை தேற்றினேன்
பிறர் கண்ணீரைத் துடைப்பதுபோலவேதான்
என் கண்ணீரையும் துடைத்துக்கொண்டேன்
நம்புங்கள்
இந்த அன்பில்
உங்களுக்குத் தந்ததைவிட ஒரு சிறிதேனும் நான் கூடுதலாக
arent;">எடுத்துக்கொள்ளவில்லை
மேலும்
'பயப்படாதே உனக்கு நான் இருக்கிறேன்' என
எனக்கு நானே சொல்லிக்கொண்டிருப்பதைக் கண்டு சிலர் என்னை பைத்தியம் என்று நினைக்கிறார்கள்
வேறு வழியில்லாமல்தானே நான் அப்படி சொல்லிக் கொண்டிருக்கிறேன்🙄