நரக பூமி
நரக பூமி


வெய்யோனின் வெம்மையிலே கண் இருண்டு நா வறள
தாகம் தீர்க்கும் தீர்த்த கிணறுகளை காணோம்
இளைப்பாறலாம் என்றல் இனிமை சேர்க்கும் மரத்தடியையும் காணோம்
வண்ணத்துப்பூச்சியினையும் காணோம், அதனை ஈர்க்கும்
வண்ணப்பூக்களையும் காணோம்
வண்ணக் கிளியையும் காணோம்
வாத்துக் கூட்டங்களையும் காணோம்
மண் புழுக்களையும் காணோம்
மான் கூட்டங்களையும் காணோம்
மாரியையும் காணோம் - அதையறியும்
மயிலையும் காணோம்
கூவும் குயிலையும் காணோம்
கொக்கரிக்கும் சேவலையும் காணோம்
கொக்கினமே நீ கொள்ளை போனாயோ
குதித்தாடிய குளமே - நீ கானலாய் கரைந்தாயோ
பாலின்றி கன்றும் வாட
பசியாற்ற இயலாது பசுவும் கதற
விளைச்சல் தந்த நிலமே
இன்று தரிசு நிலமாக
மீறி விளைந்தாலும்
அதுவும் நஞ்சாக
கார்மேகமும் காணாமல் போக
கழனியெல்லாம் கட்டிடமாக
ஆந்தையும் அஞ்சி அலற
காக்கையும் நொந்து கரைய
உணவின்றி, நீரின்றி
தன் இனமே தன்னை உண்ண...
ஏ மானுடமே .....
நீ செய்த பிழையால்
நந்தவன பூமி இன்று நரகமாகிறதே.....