நான் பைத்தியமாம்
நான் பைத்தியமாம்

1 min

449
நான் பைத்தியமாம்!
தங்கைக்கு திருமணம்
செய்து வைத்த
நான் பைத்தியமாம்!
அண்ணனுக்கு வீடுகட்ட
உதவி செய்த
நான் பைத்தியமாம்!
தந்தையின் மருத்துவச்
செலவு செய்த
நான் பைத்தியமாம்!
தாய்க்காக உயிரைவிட
ஏங்கித் தவிக்கும்
நான் பைத்தியமாம்!
எனக்காக உயிரை
பணயம் வைத்து
ஈன்றவளுக்காக என்
கிட்னியை தானம்
செய்த
நான் பைத்தியமாம்....