STORYMIRROR

Salma Amjath Khan

Romance

4  

Salma Amjath Khan

Romance

உன்மத்தம்

உன்மத்தம்

1 min
392

காதல் என்பது

பைத்தியக்கார தனம்

என்று என்றோ

கூறிய ஞாபகம் 

இன்னும் என்னிடத்தில்.


காதல் பைத்தியம் 

நான் என 

உளறுகிறேன் நான்

என்று உன்னிடத்தில்.


காதல் பித்துக்கொள்ள 

செய்யுமோ என வினவிய 

என்னை இன்று பித்து 

பிடித்து சுத்த விடுகிறதே 

இந்த காதல்.


காதல் மாயவலை 

என்று இருந்த நானும் 

இன்று அவள் வலையில்.


அவளை பார்த்த 

நிமிடம் இன்னும் 

பசுமையாய் என் மனதில்.


ஓவிய கண்காட்சியில் 

அவளும் ஒரு ஓவியமாய் 

கண்டதும் ஒட்டிக்கொண்டால் 

மனதில் கோந்தாய்.


பிகாசோவின் ஓவியத்தில் நிலைத்திருந்த என்னை 

பிரம்மனின் ஓவியத்தில் 

தவிக்க வைத்தாள்.


அலையாய் எழும் காதலை 

கரை கொண்டு 

தடுக்க பார்க்க 

கரை தாண்டி ஓடும் 

சுனாமி போல் 

காதல் ஆட்டிப்படைக்க 

இதயத்தை அடித்து 

செல்லுமோ என்றிருக்க 

இதயத்தில் அவளை 

அஸ்திவாரம் இட்டு சென்றது.


சூறாவளியாய் என்னுள் 

மாற்றத்தை ஏற்படுத்தி 

தென்றலாய் வருடும் 

மாயம் என்னவென்று 

தெரியவில்லை.


உள்ளுக்குள் அடக்க 

தெரியாமல் அவளிடம் 

என் காதலை அர்ப்பணிக்க,


 'வேண்டாம்' என 

அவள் விலக 

'வேண்டும்' என 

அவள் பின்னே 

நகர்கிறேன் காந்தமாய்.


காதல் ஈர்ப்பு விசைக்கு 

உட்படுத்தி விட்டு 

நகர்ந்து நில் என்றால் 

எப்படி சாத்தியம் ?

என் மேல் எப்படி பிழை?


நாளின் மொத்த 

நாழிகையையும் அவளே ஆக்கிரமித்தால் நான் 

எங்கனம் வாழ?


ஆக்சிஜனை மாறியவளை 

சுவாசிக்க காத்திருக்கும் 

என்னை நிராகரித்தால் 

எங்கனம் மூச்சுவிட?


மூச்சு முட்ட வைத்து 

எட்டு நின்று ரசிக்கும் 

பேதையே களவாடி 

கொள் என்னை.


காதலை அள்ள அள்ள 

குறையாமல் அள்ளிக் 

கொடுக்க காத்திருக்கும் 

அட்சய பாத்திரம் நான் 

களவாடி கொள் என்னை.


அலாவுதீனின் அற்புத விளக்கின் 

பூதம் போல் உன் அடிமையாய் 

மாறத் துடிக்கும் ஜீவன் நான் 

உரசிக் கொள் என்னை.


காதல் மடம் அனுப்பிய என்னை மடத்தில் சேர்க்க 

எண்ணி விடாதே!


நித்தம் நித்தம் 

உன்னை நினைத்து 

பித்து பிடிக்கும் 

என்னை பிடித்துக் கொள்ளடி.


கனவோடு மட்டும் 

காதல் பேசி 

உன் நினைவில் 

உன்மத்தமாகும் என்னை

உன்னவனாக்கி கொள்ளடி கண்ணே...!


Rate this content
Log in

Similar tamil poem from Romance