STORYMIRROR

Max xerox

Romance

4  

Max xerox

Romance

வீணையடி நீ எனக்கு🌹

வீணையடி நீ எனக்கு🌹

1 min
370


கன்னி தமிழில் காதல் மொழி பேசும் கிளிகள் இரண்டு.

காதல் வானில் சிறகடித்து பறந்தது.

சிங்கார தேர் போல் பவனி வரும் அழகிய மடந்தை.

மயக்கும் கண்களால் மாயம் பல செய்து அவன் மனதை அள்ளி சென்ற அழகிய நங்கை.

ஒய்யார இடை கொண்டு நாட்டிய நடை பழகும் எழில் ஓவியம்.

சிந்தனையில் சீரிய கவிதை வடிக்க செய்த செவ்விதழாள்.

தென்றலென அவன் வந்து பாவை அவளை தழுவ.

திங்கள் என அவள் விலகி, விலகி ஓட,

மலரன பூவை அவள் பூத்து குலுங்கி ஆட,

வண்டன அவன், வஞ்சி அவளை கெஞ்சி, கொஞ்சி சுற்றி வர,

வஞ்சி அவள் முல்லை கொடியன அவன் தோல் மீது படர,

அவன் விரல் கொண்டு வீனை என மதங்கியை மீட்ட,

மோக ராகம் மெளனமாக எழும்ப,

காமம் அது அரும்பென துளிர் விட,

காமதேவன் கடலென ஆர்பரித்து அவர்களை வறவேற்க,

உலகை மறந்த உயிர்கள்

உல்லாச பயணம் ஆரம்பிக்க

கவிதை பல பேசி

காவியம் எழுத தொடங்கியது.



Rate this content
Log in

Similar tamil poem from Romance