STORYMIRROR

Max xerox

Romance

4  

Max xerox

Romance

உன் கண்கள் செய்த மாயம்(அந்தாதி கவிதை)

உன் கண்கள் செய்த மாயம்(அந்தாதி கவிதை)

1 min
222

உன் கண்கள் செய்த மாயம்

உன் கண்கள் செய்த மாயம்.

மாயம் ஆனது என் இதயம்.

இதயம் அது இப்போது உன்னிடத்தில்.

உன்னிடத்தில் இருக்கும் யாவும் இனிமை.

இனிமை அது உன் இளமை.

இளமை முற்றிலும் புதுமை.

புதுமை நீ அழகான

புது கவிதை.

புது கவிதை அருவியன கொட்டியது.

கொட்டியது அழகு தமிழ் வார்த்தைகள்.

வார்த்தைகள் சில தேர்ந்தெடுத்து எழுதினேன் அழகான பா மாலை.

பா மாலையை பூமாலையாய் உன் மேல் பொழிய.

பொழிய பட்ட கவிமலர்களால் நீ அடைந்தாய் ஆனந்த பரவசம்.

பரவசத்தில் பார்த்தாய் ஒரு பார்வை.

பார்வையில் பச்சை கொடி பறக்க.

பறக்க எனக்கு இல்லை இறக்கை.

இறக்கை இருந்திருந்தால் வானத்தில் சிறகடித்து பறந்திருப்பேன் ஒரு வட்டம்.

வட்டமான வண்ண நிலவே.

நிலவே கால் முளைத்து நடந்து வந்த அதிசயம்.

அதிசயம் ஆனால் உண்மை.

உண்மை நீ ஆசையுடன் வந்தாய் என் அருகில்.

அருகில் நீ ஆச்சரியத்தில் நான்.

நான் ஆர்ப்பரித்து ஆனந்தத்தில் உன் இடை வளைத்து உன்னை கட்டி அணைக்க.

அணைக்க, அணைத்த ஆண்மையின் ஆளுமையில் பெண்மை விழித்து இன்பத்தில் திளைத்தது. 



Rate this content
Log in

Similar tamil poem from Romance