முதல் காதல், முடியா காதல்!
முதல் காதல், முடியா காதல்!
பிரபஞ்சம் தோன்றியவுடன் பிறந்த முதல் காதல்
வானமும் பூமியும்..
என்றுமே ஒன்று சேர மாட்டோம் என்றறிந்தும்
ஒன்றையொன்று சலிக்காமல் காலம் தொட்டு
காதல் செய்கின்றன..
பூமி தகித்தாலோ வான் நெஞ்சில் ஓட்டை விழும்..
வானம் சுகித்தாலோ பூமி புத்துயிர்கள் தரிக்கும்..
வாஞ்சை காதலை வானவன் உரைக்க
மேக மன்மதன் தூதுவனாய்
அன்பு மழை அம்புகள் அடுக்கடுக்காய் எய்த
பூமியவள் பரவசமாய் பச்சை பட்டுடுத்தி
பல வண்ண பூக்கள் பரவலாய் சூடி
r: rgb(51, 51, 51); background-color: rgb(255, 255, 255);">அழகாய் வளமாய் விண் நோக்குகையில்
வானம் மகிழ்ச்சியின் உச்சத்தில்
சினேக சூரியன் கூச்சத்தில்
வர்ண ஜால வானவில் கொண்டு கொண்டாடும்..
தொடுவானம் தொடுவது போல் தோன்றினாலும்
உரசாமல் உறவாடும் வான்பூமியின்
பிரிவிலும் பிரியம் பரிவு..
வான்மழை சொரிவு
வளமண் செறிவு
காதலின் முதிர்வு..!
இன்பிறந்த தெளிவு..
கைகோர்த்து கூடினால் தான் காதல் என்றில்லை..
தொலைவில் ஆனாலும்
தொலையா அன்பே
காதலே..!