STORYMIRROR

Athila Nabin

Inspirational

4  

Athila Nabin

Inspirational

விடாமுயற்சி!

விடாமுயற்சி!

1 min
395

பலர் வீடுகளை அழித்து,

தன் வீடுதனை அழகு படுத்தினான்;

வலை கலைந்த கவலையில் சிலந்திகள்!


வேறிடம் வெற்றிடம் தேடி 

புலம் பெயர்ந்தன;

வெறுமையுடன் தான்,

ஆனால் பொறுமையுடனும் திறமையுடனும்..!


சிலந்தி போலே சிலரது வாழ்வு,

தன்னம்பிக்கை துணையெனில் ஏது தாழ்வு!


உன் கனவுதனை வதைத்தாலும்

உழைப்பினை சிதைத்தாலும்

மீண்டெழும் உனை மீண்டும் உதைத்தாலும்

முயற்சி முழுவதையும் புதைத்தாலும்

முன்னேறும் முனைப்பை மனதுக்குள் விதைத்தால்

எத்தனை சூழ்ச்சிகள் சூழ்ந்தாலும்

எத்தனை முறை நீ வீழ்ந்தாலும்

மீண்டும் எழுவாய், மீண்டும் முயல்வாய்..


அதோ அந்தரத்தில் தொங்கினாலும் அறுந்து விடா தன் வலையால்

புவி இசை எதிர்த்து

மேல் நோக்கி நகர்ந்து

உற்சாகமாய் ஆடி ஓடி 

உட்கூரையில் வெண்வலை பிண்ணி

ஒய்யாரமாய் உச்சியில் உட்கார்ந்திருக்கும்

அந்த சிலந்திகள் போல்..!


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational