STORYMIRROR

Athila Nabin

Romance

4  

Athila Nabin

Romance

ஏய் குச்சி உடம்புக்காரி..!

ஏய் குச்சி உடம்புக்காரி..!

1 min
222

ஏய் குச்சி உடம்புக்காரி..

கொஞ்சம் குண்டாகேன்டி..‌

முற்றிய மோகத்தில் உன்

முழுவதிலும்

முத்தங்கள் புதைக்க

முப்பது வினாடிகளில்

முடிந்து விடுகிறது..


ஏய் குச்சி உடம்புக்காரி..

கொஞ்சம் குண்டாகேன்டி..‌

ஆறேழு மடிப்பெடுத்தும்

உன் புடவை முந்தானை

கணுக்கால் வரை நீள்கிறது..


ஏய் குச்சி உடம்புக்காரி..

கொஞ்சம் குண்டாகேன்டி..‌

ஆசையாய் உன் மடி சாய

உன் பஞ்சு நெஞ்சு போலல்லாது

பாறை படுக்கையாய் படுத்துகிறது..


ஏய் குச்சி உடம்புக்காரி..

கொஞ்சம் குண்டாகேன்டி..‌‌

உனக்கும் சேர்த்து நானே உண்பதாய்

உறவினர்கள் கேலி சிரிக்கையில்

விசேஷ விருந்து வாய்க்குள்ளேயே விக்குகிறது..


ஏய் குச்சி உடம்புக்காரி..

கொஞ்சம் குண்டாகேன்டி..‌

இரு கையால் உன்னை இறுக்கி அணைத்திட ஆசை..

ஒற்றைக் கையினுள் ஒடுங்கி விடுகிறாயே அன்பே..


ஏய் குச்சி உடம்புக்காரி..

உன் கூட நடந்தால்

ஒற்றை உடம்புக்காரன் எனை

குண்டன் என்கின்றனர்..

பொருத்தமான ஜோடி என்று பெயரெடுக்க வேண்டுமடி..

அதனால் கொஞ்சம் குண்டாகேன்டி..‌‌!


Rate this content
Log in

Similar tamil poem from Romance