STORYMIRROR

Ravivarman Periyasamy

Romance

4  

Ravivarman Periyasamy

Romance

காத்திருக்கிறேன் உனக்காக

காத்திருக்கிறேன் உனக்காக

1 min
2.8K

மின் மினி போல உன் கண்மணி மின்னுகிறது

ஊடலும் கூடலும் காதல்தானே என

உன் மை விழி மருகுது

உன் முகத்தினை கண்ட நான் 

அகத்தினை மறந்தேன்

தூரமும் நேரமும் என்னை சுருக்க

பாரம் குறைக்க வாராயோ என் கண்ணே

இருவரும் அருகே இருக்க 

வார்த்தை தேவையோ வாழ்க்கைத் தேட

கரைந்த நாட்கள் கனவாய் போகடடும்

வரும் நாட்கள் வானமாய் நீளட்டும்

உன் வண்ணத்தின் மீது நான் துயில் கொள்ள

என் எண்ணத்தில் எப்போதும் நீ இருப்பாயடி

ஏனோ இந்த நாட்களுக்கு இரக்கமில்லையோ

காலம் பதில் சொல்லுமா என் கண்ணம்மா

உன்னோடு நான் சேரும் நாளை எண்ணியே

நகராத நாட்களை கடக்கிறேன் கன்னியே

பகலும் இரவும் எனக்கு ஒன்றாகிப்

போக

நானோ உன்னோடு ஒன்றாகும் வேளையை நோக்க

காலத்தை கடந்து கரம்பிடிப்பேன்உன்னை

நினைவுகளை நிஜமாக்க என்னோடு இணை

பயணிப்போம் ஒன்றாக நாமும்



Rate this content
Log in

Similar tamil poem from Romance