STORYMIRROR

Latha S

Romance Inspirational

4  

Latha S

Romance Inspirational

காதலர் தினம்

காதலர் தினம்

1 min
310

காதல் என்பது என்ன?


இரு இதயங்களின்

கருத்தொருமித்தல்

வெளித்தோற்றம் மட்டும் சார்ந்த விஷயமில்லை.

காதல்தான் வாழ்வின் அஸ்திவாரம்


கல்யாணம் என்பது

காலம் முழுவதும்

கருத்தொருமித்து வாழ

கடவுள் இணைசேர்க்கும் வாழ்க்கைத்துணை அத்துணையைக்

காதலித்து மணந்துகொண்டு ஒற்றுமையாக வாழ்ந்தவருமுண்டு.

பெற்றோர் பத்துப் பொருத்தம் பார்த்து இணைத்து வைத்தபின்

கருத்து வேறுபாட்டால் பிரிந்தவருமுண்டு


வாழ்க்கைத் துணை என்ற உறவு சரியாக அமைந்துவிட்டால்

மற்ற அனைத்து உறவுகளை மட்டுமல்ல உலகத்தையே

வென்று விடலாம்.


துணையை மதித்தால்

துன்பத்தை தூர நிறுத்தலாம்

துணையை மதிக்காவிட்டால் துன்பம் நம்மைத் துரத்தும்


வாழ்க்கையில் ஒன்று சேர்வதற்கு

மட்டுமின்றி

வாழ்நாள் முழுவதும்

ஒற்றுமையாக வாழ

வழி வகுப்பது

கணவன் மனைவிக்கு

இடையேயான காதல்தான்


ஒருவரை ஒருவர்

உண்மையாக நேசித்தால்

ஒவ்வொரு தினமும்

காதலர் தினம்தான்


Rate this content
Log in

Similar tamil poem from Romance