அன்னைக்கு மரியாதை
அன்னைக்கு மரியாதை


அம்மா என்பவள்
அன்பின் பிறப்பிடம்
ஆனந்தத்தின் இருப்பிடம்
இறைவனுக்கு மாற்று
ஈகையின் ஊற்று
உள்ளத்தால் உயர்ந்தவள்
ஊன்றுகோல் போன்றவள்
எப்போதும் உழைப்பவள்
ஏணியாய் இருப்பவள்
ஐம்புலன் ஆள்பவள்
ஒப்புரவு ஒழுகுபவள்
ஓய்வு அறியாதவள்
ஔடதம் அறிந்தவள்
அஃதே அவள்
அம்மாவுக்கு மாற்றாக
வார்த்தைகள் தேடினேன்
இறுதியில் உணர்ந்தேன் அம்மாவுக்கு
மாற்று இல்லை என்று
தன்னலமில்லா தாயன்பு
தனிப்பெரும் சிறப்பு
தாய் செய்யும் தியாகங்கள்
தன்னுள் மறைத்த சோகங்கள்
தனக்குள் உருகும் தருணங்கள்
அறிந்தவர் உளரோ
தரணியிலே
தாயின் மடியில் படுக்கும் சமயம்
தலை பாரம் தானாக அகலும்
தாய்க்கு நிகரான உறவு
தந்ததுண்டோ இந்த உலகு
தாயிற் சிறந்த கோவிலில்லை
தாயை மிஞ்சிய
தெய்வமில்லை