பயம்
பயம்
பயம் என்பது
பிரவாகமாகப் பொங்கும் உணர்ச்சி
பின்தங்கவைக்கும் வளர்ச்சி
பிறரையும் முடக்கும் முயற்சி
பிறக்கும் செய்திகளில் அதிர்ச்சி.
நண்பனையும் சந்தேகப் படவைக்கும்
நடப்பவற்றில் கவனம் சிதறடிக்கும்
நட்டாற்றில் நிற்பதுபோல் மருளவைக்கும்
நடுநிசியில் கேட்கும் ஒலி உறையவைக்கும்
கோழைத்தனம் மனதை ஆக்ரமிக்கும்
கோடிஅறையில் பதுங்க மனம் விழையும்
கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்
கோமாளி எனும் நகைப்புக்கு ஏதுவாகும்.
எலிக்கு பூனையைக் கண்டால் பயம்
ஏழைக்கு எதிர்காலம் பற்றிய பயம்
எதிர்க்கட்சிக்கு ஆளும் கட்சிமேல் பயம்
எளியவர்க்கு வலியவரை எதிர்க்க பயம்.
மாணவர்களுக்கு தேர்வு பயம்
பணக்காரனுக்கு திருடர் பயம்
கள்வர்க்கு காவலர் பயம்
காதலர்க்கு திருமண பயம்.
சிறிதும் பெரிதுமான
பயங்கள்
சிறுகக் கொல்லும்
ரணங்கள்
எல்லோர்க்கும் பயம்
பொதுவில் உண்டு
பயத்தைப் போக்க
முயற்சிப்பது நன்று
