வீட்டுப்பூ
வீட்டுப்பூ
வீட்டுத் தொட்டியில் நட்டு
விடாமல் நீர் வார்த்து
ஆறு மாதங்கள்
அருந்தவம்போல்
காத்திருந்தபின்
அண்மையில் மலர்ந்தது அழகிய செம்பருத்தி
வித்தியாசமாய்
வெள்ளை வண்ணத்தில்
பணத்தை விட்டெரிந்து
பை நிறைய பூ வாங்கினாலும்
வீட்டில் பூத்த
ஒற்றைப்பூவுக்கு ஈடாகுமா
