தலை நிமிர் தமிழா
தலை நிமிர் தமிழா


குடியரசு தினம் என்பது என்ன
ஆளுநர் கொடி ஏற்றி அரசு மரியாதையை ஏற்பதுடன் முடிவதா?
அரசியலமைப்புச் சட்டத்தைச் செயலாக்கிய நாளில்
அழுது புலம்பும் அணங்குகளின்
அவலங்களைப்
புறந்தள்ள வேண்டாமா !
அரசின் கஜானா நிரம்புவதற்காக
அனைத்து குடிமகன்களின் வயிறும்
மதுவால் நிரம்பவேண்டுமா!
அன்னையர் பலரின்
சாபங்களுக்கு
விமோசனம் தேட வேண்டாமா!
அடுப்பெரிய வழியின்றி
அன்றாடங்காய்ச்சிகள்
அல்லல் பட
ஆனந்தமாக குடிமகன்கள் ஆட்டம் போடலாமா!
குடி உயரக் கோன் உயர்வான் என்று
அதியமான் அவையில்
ஔவையார் பாடியது
குளறுபடி ஆகலாமா!
குடியை வேரறுத்து
குடும்பங்கள் உய்ய
குடிமக்கள் எல்லோரும்
குடியரசு தினத்தில்
உறுதிமொழி எடுப்போமா!
டாஸ்மாக் திறந்தாலும்
தள்ளாடி விழாமல்
தன்மானச் சிங்கங்களாய்
தலைநிமிர்ந்து நடப்போமா!!!