STORYMIRROR

Athila Nabin

Comedy Horror

3  

Athila Nabin

Comedy Horror

இராப்பொழப்பு

இராப்பொழப்பு

1 min
189


நேரம் சரியாக 12 மணி.. 

தாண்டி செல்லும் இடம் சுடுகாடு..

ஒரு பெண்ணின் ஓலங்களும்

நாயின் ஊளைகளும் எங்கிருந்தோ கேட்கின்றது..

பனி இரவிலும் வியர்வைத் துளிகளின் வெள்ளப்பெருக்கு..

பெருங்காற்றில் நாணல் போல் கால்களின் நடுக்கம்..

சட்டைப் பையில் இருந்த விபூதி எடுத்தான்..

குலசாமி பெயரைக் கூறி பூசிக் கொண்டான்..

“பேய்க்கெல்லாம் பயந்தா பொழப்ப யாரு பார்க்குறது?

பொண்டாட்டி புள்ளைய யாரு காப்பாத்துறது?”

தொலைந்த தைரியத்தை தேடிப்பிடித்து

கடமையாற்ற கிளம்பினான்

திருடன்..!


Rate this content
Log in

Similar tamil poem from Comedy