STORYMIRROR

Se Bharath Raj

Comedy Classics Others

4  

Se Bharath Raj

Comedy Classics Others

என் மடிக்கணினி

என் மடிக்கணினி

1 min
422

அதற்கு வயது ஆறு ஆகிவிட்டது.,


அது பிறந்ததில் இருந்தே 

அதே நிறத்தில் தான் இருக்கிறது.

கருப்பு, 

கண் மை கருப்பு.,


அதனை வெய்யிலில் காட்டாமல் இருப்பதால் என்னவோ

அது வெளுத்து போகாமல் இருக்கிறது.,


வெளுத்து போகாததால் 

வேலை நன்றாக செய்யும், 

என்று 

நம்பி ஏமாந்த நண்பர்கள் பலர்.,


அதன் திரையில் 

ஒளியை படர வைப்பதற்கு முன்

மூச்சு நின்று 

நாம் தரையில் படர்ந்து விடுவோம்.


அதில் அ பொத்தானை அழுத்தினால்

அ..ஆ..இ..ஈ..உ..ஊ., என்று 

அது பங்கிற்கு 

ஏதேதோ அழுத்த ஆரம்பித்து விடும் 

பொத்தானை அழுத்தாமல்.,


மடிக்கணினி என்று எண்ணி

மடியில் அதனை வைக்கமுடியாது,

துப்பாக்கி இல்லாமல்

சுட்டு விடும் 

தொடையை.,


அதற்கு பத்து நிமிடத்திற்கு

ஒரு முறை உயிர் கொடுக்கவேண்டும்,

இல்லை 

உயிர் கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும்.

இல்லை உயிர் போனது போல் நடித்து

ஊரை ஏமாற்றும் 

சில சமயங்களில் என்னையும்.,


அதை பழுதுபார்த்தல் முடியும்

ஆனால் அதனைச் செய்ய 

எனக்கு என்றும் தோன்றியதில்லை.

ஒரு வேளை, 

அது அப்படியே இருந்தால்தான் 

பிறரிடம் மாட்டி கொண்டு 

துன்ப படாது 

என்ற‌ நல்லெண்ணம் கூட

ஒரு காரணமாக இருக்கலாம்...


Rate this content
Log in

Similar tamil poem from Comedy