STORYMIRROR

DEENADAYALAN N

Abstract Comedy

5  

DEENADAYALAN N

Abstract Comedy

காதல் பாட்டுக்கு எசப் பாட்டு

காதல் பாட்டுக்கு எசப் பாட்டு

2 mins
650

 

 

 





இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது..

 

நகைக் கடை முன்னால

நின்னுகிட்டு

எதுக்கு இந்த பாட்டு – அன்பே

நீ நடையகட்டு!


(இல்லேன்னா ‘க்ரெடிட் கார்டு’ எகிறிடும்!)


 

 

நீ என்னென்ன சொன்னாலும் கவிதை

 

பட்டுப் புடவை

என்று மட்டும்

சொல்லி விடாதே - கண்ணே

பர்ஸில் காசில்லை!


(எனவே கவிதையே சொல் பெண்ணே!)





நீ இருந்தால் என் மாளிகை விளக்கெரியும்!


மன்னவன் என் கையில்

பொருளில்லை

மண்ணென்னை வாங்கக் கூட

காசில்லை!


(எனவே சீக்கிரம் வீட்டுக்கு வந்து விடு பெண்ணே!)


 



கூந்தல் கறுப்பு குங்குமம் சிவப்பு


அந்தக்காலம் போச்சு

பொட்டும் சவுரியும்

அத்தனை நிறத்திலும்

இப்பொ வந்தாச்சு!


(எனவே ‘இருட்டு கறுப்பு ரத்தம் சிவப்பு’)





மண்ணில் இந்த காதல் இன்றி

யாரும் வாழ கூடுமோ..


வேலை ஒரு பக்கம்

கடமை ஒரு பக்கம்

பொண்டாட்டி ஒரு பக்கம்

எங்கு வரும் காதல்?


(கூடும் சார் கூடும்!)





அழகு தெய்வம் மெல்ல மெல்ல

அடி எடுத்து வைத்ததோ!

 

அழகா இருந்தாலும்

அம்சமா இருந்தாலும்

அடி என்னவோ அடிதான்

ஓடிடு நண்பா ஓடிடு!


(தப்பிச்சாண்டா சாமி!)




ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்

 

ஏன் சார்? எதுக்கு சார்?

பொண்ணப் பார்த்தீங்க

அதுலே ஒன்னும் தப்பில்லே

அப்புறம் எதுக்கு நிலவு?


(ஆனா பாட்டு சூப்பர் பாட்டு!)




அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்

 

கொஞ்சும் என் கணவா

அதெல்லாம் வேண்டாம்

எட்டு மணி சீரியல் உச்சத்துலே

‘டிபனு கிபனு’ கேட்டு நச்சரிகாதே!


(அழகாம்.. ஆராதனாயாம்!)





பத்துக்கு மேலாடை பதினொன்றே ஆகும்

பக்கத்தில் நீ இருந்தால் பல கதை உருவாகும்


அன்புள்ள ஐயா

மனசாட்சி இல்லையா

இது ஒரு காதல் பாட்டா

காதல் வருமா இதக் கேட்டா..?


(கருத்துள்ள பாட்டுதான் - ஆனா - காதலுக்கு பொருந்துமா!.)




நான் பார்த்ததிலே உன் ஒருத்தியைத்தான்

அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்


இது ஞாயம் இல்லே சார்

நயனதாரா பாருங்க

திரிஷாவெ பாருங்க

தமன்னாவெ பாருங்க

கீர்த்திசுரேஷ் பாருங்க

அனுஷ்காவெ பாருங்க

அப்புறமா சொல்லுங்க!


(முடிவை சொல்லுங்க சார் வி ஆர் வெயிட்டிங்..!)



Rate this content
Log in

Similar tamil poem from Abstract