கோடை! (வீட்டினுள் இருப்போம்)
கோடை! (வீட்டினுள் இருப்போம்)
கோடை!
(வீட்டினுள் இருப்போம்)
(கோவை என். தீனதயாளன்)
கோடையில் ஒரு கொரானா நாட்டுப் பாடல்
(ரங்கனும்-ரங்கியும் பாடுகிறார்கள்)
எங்கே போயி நீ இருந்த - ரங்கா
எனக்கு சொல்லாமெ ஏன்போனே?
உனக்கு சொல்லாமே போவேனா - ரங்கி
வெத்தலேபாக்கு வாங்க போனேன்
வெயிலு அடிக்கிற அடியிலே - ரங்கா
வெத்தலேபாக்கு தேவை தானா
மழையில் தானே நோயிவரும் – ரங்கி
வெயிலில்போனா பிரச்சினை இல்லே
வெத்தலே பாக்கு கெடச்சுச்சா - ரங்கா
வெண்கோபன் கடையிலே இருந்துச்சா
வெண்கோபன் கடையிலே இல்லே – ரங்கி
வெளியிலே தூரம்போய் வாங்க வேணும்
கொரானா இருக்கு வெளியேரங்கா – இப்பொ
வெத்தலே நமக்கு தேவைதானா
வெத்தலே பாக்கு இல்லேயின்னா - ரங்கி
பைத்தியம் பிடிச்சி போயிடு
மே
வெத்தலே பாக்கு வாங்கப்போனா - ரங்கா
கொரானா தொற்றி செத்திடுவோமே
எப்பிடியிருந்தாலும் செத்துப் போவோம் – ரங்கி
வெத்தலே போட்டுட்டு போய்ச்சேருவோம்
நம்ம மட்டும் போக மாட்டோம் – ரங்கா
நாலு பேருக்கு தொற்ற உடுவோம்
அந்த நாலும் வெளியில் போனா – இன்னும்
நாலு நாலுன்னு தொற்றிக் கொள்ளும்
அந்த நாலு நாலும் தொற்றி – மேலும்
அறுபத்தி நாலுன்னு ஆகிவிடும்
ஆறு நாலு வெளியேபோனா - ரங்கா
ஒன்னு ரெண்டு எட்டாகும்
ஒன்னு ரெண்டு எட்டு சேந்தாக்க - அப்புறம்
என்னாகும் சொல்லு ரங்கா..
போதும் போதும் போதும் ரங்கி – எனக்கு
இப்போ எல்லாமே புரிஞ்சி போச்சி
நாம வெளியிலே போகாம இருந்தாக்கா - உசிரு
நூத்துக் கணக்கிலே மிஞ்சிடுமே!
சரியாச் சொன்னே ரங்கி ரங்கி – இனிமே
வீட்டுலயிருந்து உசுரைக் காப்போம்!
சரியாச் சொன்னே ரங்கா ரங்கா – இனிமே
வீட்டுலயிருந்து உசுரைக் காப்போம்!
(கோவை என். தீனதயாளன்)