புத்தகப்பை
புத்தகப்பை
இரண்டு வருடங்களாக
சுவரில் அலங்காரப்பொருளாக
தொங்கிய எனதுயிரே!
இணைய வகுப்புகள்
இன்னுயிர் பள்ளி நட்புகளைத்
தரவில்லையே!
நட்புகளுக்கு அம்மா தந்த
இனிப்புகளும் வாதாமரம்
ஈந்த பருப்புகளும்
பொக்கைவாய் கிழவி
விற்ற கொடுக்காப்புளிகளையும்
மதியவேளைகளில்
நட்புகளுடன் இணைந்து தின்ற
நாட்கள் இனி வந்திட
உதவி புரிவாயா!
