சேயின்றி தாயானேன்
சேயின்றி தாயானேன்


தாய்மை அடைந்தும்
நீ கொடுத்த மாற்றங்கள் இருந்தும்
நீ மட்டும் இல்லையே!!!😔
காரணமே அறியாமல்
உனை இழந்து நிற்கிறேன்😒
பிரசவ வலியும் தோற்றுப்போனது
நீ இல்லை என எண்ணும்🤱🏻 போது!!!
குழந்தைகளை 👶🏻 எங்கு பார்த்தாலும் ஏக்கம்கொண்டு
தூக்கம் இழக்கிறேன்!!!
கனவு கண்டெழுந்து
உன்னை தேடுகிறேன்🤰🏻
அருகிலும் என் வயிற்றிலும்!!!
என்வலி தீர வழி நீ மட்டுமே!!! 😔
நான் கருவில்🤰🏻 தாங்கிய என் தெய்வமே 🙏
அம்மாவிடம் நீயே திரும்பி வந்துவிடு
என் கருகும்💔 இதயத்தை மீட்டெடுக்க!!!