நண்பனாக…
நண்பனாக…
வெண்ணிற ஓளி நிறைந்த
ஒரு விடியலில்
நான் காணும் நிலவின்
பிம்பமாக என் கனவுகள்!
என்றுமே என் நண்பனாக
வாழ்வினில் துணை வரும்
மனதினில் தோன்றும்
எண்ணங்களின் ஓட்டத்தினில்
நித்தமும் நான் தேடும்
தெளிவான ஒரு முடிவு
என்று தான் வரும் என
காத்திருக்கும் நாட்கள்!