என் மனதின் எல்லையில்!
என் மனதின் எல்லையில்!
நகர்ந்திடும் மேகங்களின் ஊடே
சட்டென்று சென்று மறைந்திடும்
மாலை வெளிச்சத்தின் கீற்றுகளில்
என் மனதின் எல்லைகளை
வரையறுத்து பின் மறந்து விட்டேன்!
காலத்தின் கோலத்தில் நித்தமும்
மாறிடும் சூழ்நிலையின் கைதியாக
எத்தனை நாள் நானிருப்பது?
சின்னச் சின்ன ஆசைகளுக்கும்
கண்ணுக்குத் தெரியாத விலங்கிட்டு
மனதினுள் பூட்டி வைக்க நான்
கவனிக்க மறந்த நொடிகள்
உன்னை விட்டு வெகு தூரத்தில்!