கொரோனா மாற்றங்கள்
கொரோனா மாற்றங்கள்
எத்தனையோ மனிதர்கள்
இங்கு கொண்டு வரமுடியாத
ஒன்றை நீ கொண்டு வந்தாய்!
என் வாழ்வின் சறுக்கல்
விளையாட்டினை நீ
எதிர்பாராமல் இன்று
துவக்கி வைத்தாய்!
கலைத்து சோர்ந்த என்
மனதின் நிலையினை
கண்டு நகைத்தாய்!
கண்ணீரில் நித்தமும்
என் கனவுகளை கலைத்தாய்!
இயற்கை மாற்றங்களை
எதிர்பாராத நேரத்தில்
கொண்டு வந்து மக்களை
அலைக்கழித்தாய்!
என்று தான் நீ
எங்களை விட்டு செல்வாயோ!