STORYMIRROR

Siva Kamal

Romance Tragedy Classics

4  

Siva Kamal

Romance Tragedy Classics

நேசம்

நேசம்

1 min
101

மறந்துபோய்விடவில்லை

தினம் உன்னை நினைக்காமலும் 

இல்லை

மன்னிக்க முடியா தவறுகள் எதுவும்

நமக்குள் நிகழ்ந்திடவில்லை

திரும்பிட இயலா தொலைவுகளுக்கு 

நாம் செல்லவும் 

இல்லை


இன்னும்

நம் ஆதி நேசத்தை 

நமதிந்த சின்னஞ்சிறிய வெறுப்புக்கள் 

ஒருபோதும் மிஞ்சிடப்போவதில்லை

நாம் இல்லை என மறுத்தாலும் கூட

நமக்குள் எதுவும் இல்லாமல் போய்விடப்போவதும்

இல்லை


இருந்தும்

இப்போதெல்லாம்

ஒருவர் வாழ்வில் இன்னொருவர் 

இல்லாதது போலவேதான்

அவ்வளவு அலட்சியமாய் 

நடந்துக்கொள்கிறோம்


அந்தோ

காதல்

நம்மைக்கண்டு 

நகைத்துக்கொள்கிறது!!


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Romance